முதற்பக்கம் » பிரிவுகள் » நினைவகங்கள் » நடைபெற்று வரும் பணிகள்
நடைபெற்று வரும் பணிகள்
 • சென்னை, கிண்டியிலுள்ள காந்தி மண்டப வளாகத்தை ரூ.11.62 கோடி மதிப்பீட்டில் புதுப் பொலிவுடன் புனரமைத்திட பணிகள் நடைபெற்று வருகின்றன.
 • தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மகாமகம் கலையரங்கத்திற்கும், புதியதாக அமைக்கப்பட்டு வரும் எட்டு மணிமண்டபங்களுக்கும் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
 • சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அவர்களுக்கும், சுயமரியாதைச் சுடரொளி ஜீவரத்தினம் அவர்களுக்கும், ரூ.2.38 கோடி மதிப்பீட்டில் சென்னையில் மணிமண்டபங்கள் அமைத்திட பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
 • குமரி மாவட்டம் தமிழ்நாட்டோடு இணைய, போராட்டம் நடத்திய தியாகி சிதம்பரநாதன் அவர்களுக்கு, களியக்காவிளையில் ரூ. 8.50 லட்சம் மதிப்பீட்டில் திருவுருவச்சிலை அமைத்திட பணிகள் நடைபெற்று வருகிறது.
 • இந்தித்திணிப்பை எதிர்த்துப் போராடி உயிர் நீத்த மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னச்சாமி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் திருச்சிராப்பள்ளியில் ரூ.8.79 லட்சம் மதிப்பீட்டில் திருவுருவச்சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
 • சென்னையில் உள்ள காமராஜர் நினைவு இல்லம் மற்றும் கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் மணிமண்டபம் ஆகியவை ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்க பணிகள் நடைபெற்று வருகின்றன
 • வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களுக்கு சிவகங்கையில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் நினைவுச் சின்னம் அமைக்க பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 • தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ரூ.77 லட்சம் மதிப்பீட்டில், விருதுநகரில் மணிமண்டபம் அமைக்கப்பட பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 • கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தில் ரூ.10.80 லட்சம் மதிப்பீட்டில் சிலை அமைக்க பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
 • சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் ரூ.63 கோடி மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் மற்றும் மாநில செய்தி நிலையம் அமைக்க பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
 • மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 09.04.2013 அன்று சட்டப் பேரவையில் அறிவித்துள்ளவாறு, வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு கயத்தாறில் மணிமண்டபம் அமைக்க, பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

   செய்திகள்

மேலும் »

ஊடகங்கள்
துறை
ஆவணங்கள்
முதற்பக்கம்| உங்கள் கருத்து | தொடர்பு கொள்ள | தள வரைபடம் | வரைபடம்
மேலே
© 2012 இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசுத் துணைச் செயலாளர், தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009, தமிழ்நாடு, இந்தியா.
தொழில்நுட்பம்: சாப்ட் சோர்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்