முதற்பக்கம் » பிரிவுகள் » தமிழரசு

" தமிழக மக்களின் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் தடையாக நிற்கும் எந்த இடையூறுகளையும் பொடிப் பொடியாக்கும் உறுதிப்பாடு என் உள்ளத்தில் எப்பொழுதும் உண்டு."

செல்வி ஜெ ஜெயலலிதா
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
தமிழரசு

தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்கள், மக்கள் நலப்பணிகள், நலத்திட்ட உதவிகள், சாதனைகள் மற்றும் அறிவிப்புகள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அச்சு ஊடகமாக தமிழரசு இதழ் திகழ்ந்து வருகிறது.

மேதகு தமிழக ஆளுநர் அவர்களின் உரைத் தொகுப்புகள், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உரைத் தொகுப்புகள் மற்றும் அறிவிப்புகள், தமிழக அரசின் சாதனைகள், மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாடுகள், அரசு நலத்திட்ட உதவிகள், மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த விரிவான கட்டுரைகள், தமிழகம் முழுவதிலும் உள்ள நலத்திட்ட உதவிகள் பெற்ற பயனாளிகளின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் வெற்றிக் கதைகள், பொதுமக்களுக்குப் பயனளிக்கும் முக்கிய அரசாணைகள் உள்ளிட்டவை தமிழரசு இதழில் வெளியிடப்படுகின்றன. மேலும், மகளிர் நலம், குடும்பநலம், மருத்துவம், ரத்ததானம், எய்ட்ஸ் விழிப்புணர்வு உள்ளிட்ட சமூக நலம் சார்ந்த அரசின் திட்டங்களை விளக்கிடும் கட்டுரைகள், தமிழ் இலக்கிய வளத்தை உணர்த்தும் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் ஆகியவற்றுடன் அரசு மற்றும் அரசுத்துறை சார்ந்த நிறுவனங்களின் விளம்பரங்களையும் தாங்கி தமிழரசு இதழ் வெளியிடப்படுகிறது. தமிழரசு இதழ் தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படுகின்றது

சிறப்பு வெளியீடுகள்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முக்கிய நிகழ்ச்சிகளில் ஆற்றிய தமிழ் மற்றும் ஆங்கில உரைகள் அடங்கிய சிறப்பு வெளியீடுகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகங்கள் மூலமாக மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. தமிழரசு இதழ்கள் மட்டுமல்லாமல், தலைவர்கள் மற்றும் சான்றோர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய மடிப்பேடுகள், சிறப்புக் கையேடுகள், சிறு தொலைபேசிக் கையேடு, அரசு விழா அழைப்பிதழ்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றையும் அழகிய முறையில் வடிவமைத்து, தமிழரசு அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகின்றன. மேலும், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் இதரப் பிரிவுகளுக்குரிய விண்ணப்பங்கள் மற்றும் படிவங்கள் போன்றவையும் இங்கு அச்சிட்டு வழங்கப்படுகின்றன.

   செய்திகள்

மேலும் »

ஊடகங்கள்
துறை
ஆவணங்கள்
முதற்பக்கம்| உங்கள் கருத்து | தொடர்பு கொள்ள | தள வரைபடம் | வரைபடம்
மேலே
© 2012 இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசுத் துணைச் செயலாளர், தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009, தமிழ்நாடு, இந்தியா.
தொழில்நுட்பம்: சாப்ட் சோர்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்