முதற்பக்கம் » பிரிவுகள் » விளம்பரம்

"தற்போது உலகில் ஒரு நாட்டின் இடத்தை உண்மையில் தீர்மானிப்பது படைபலமோ அல்லது பொருளாதார வலிமையோ அல்ல. அதை அறிவாற்றல் தான் தீர்மானிக்கிறது. தகவல் தொழில்நுட்பம் என்பது மனிதனின் அறிவாற்றலுக்குச் சமமான ஒன்று. இதுதான் இந்தியாவை முதல் நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.."

செல்வி ஜெ ஜெயலலிதா
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
விளம்பரப் பிரிவு

அரசின் திட்டங்கள், சமூகநலப் பணிகள், கொள்கைகள், சாதனைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் ஆகியவற்றை மக்கள் அறிந்துகொள்ளச் செய்யும் வகையில் நாளிதழ்கள் மற்றும் காலமுறை இதழ்களில் விளம்பரங்களை இத்துறை வெளியிட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறைகள், வாரியங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் விளம்பரங்களை நாளிதழ்கள் மற்றும் காலமுறை இதழ்களில் வெளியிடும் மையமாக இத்துறை செயலாற்றி வருகிறது. விளம்பரத்தின் தன்மை மற்றும் அவை சென்றடைய வேண்டிய பகுதி, தகவல் கொண்டுபோய்ச் சேர்க்கப்பட வேண்டிய மக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பத்திரிகைகளுக்கு விளம்பரங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இந்திய வர்த்தக இதழிலும் (Indian Trade Journal) விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.

ஒப்பந்தப்புள்ளி விளம்பரங்கள்

நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, கூடுதல் செலவு ஏதுமின்றி அனைத்து அரசு விளம்பரங்களும் மக்களை எளிதில் சென்றடையும் வகையில் ஒப்பந்தப்புள்ளி மற்றும் வரைகலை விளம்பரங்கள் மத்திய அரசின் தேசியத் தகவல் மையத்தின் வழியாக, தமிழக அரசின் www.tn.gov.in என்ற வலைதளத்தில் வெளியிடப்படுவதுடன், www.tender.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து ஒப்பந்தப்புள்ளிப் படிவங்களை இலவசமாகப் பதிவிறக்கம் (Download) செய்துகொள்வதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு விளம்பரங்கள் பத்திரிகைகளில் வெளியிடப்படுவதுடன், இணையதளத்திலும் வெளியிடப்படுவதால், அரசின் வெளிப்படையான நிருவாகம் உறுதி படுத்தப்பட்டுள்ளது என்பதோடு, தகுதியான அனைவரும் தமிழக அரசு கோரும் ஒப்பந்தப்புள்ளிகளில் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒப்பந்தப்புள்ளி செய்தி மலர்கள்

தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம், 1998 மற்றும் அதன்கீழ் இயற்றப்பட்ட தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி விதிகள், 2000இன்படி அரசின் செயல்பாடுகள் அனைத்தையும் மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் மாவட்ட / மாநில ஒப்பந்தப்புள்ளி செய்திமலர்கள் வாரந்தோறும் வெளியிடப்படுகின்றன. மேலும், மாநில ஒப்பந்தப்புள்ளி செய்திமலர் தமிழ்நாடு அரசின் www.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகின்றது. மாவட்ட அளவில் வெளியிடப்படும் ஒப்பந்தப்புள்ளி விளம்பரங்கள் மாவட்ட ஒப்பந்தப்புள்ளி செய்திமலரிலும் தலைமையிடத்தில் வெளியிடப்படும் ஒப்பந்தப்புள்ளி விளம்பரங்கள் மாநில ஒப்பந்தப்புள்ளி செய்திமலரிலும் வெளியிடப்படுகின்றன. இம்மலர்களில், ஒப்பந்தப்புள்ளிகள் மீது மேற்கொள்ளப்பட்ட முடிவுகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.

   செய்திகள்

மேலும் »

ஊடகங்கள்
துறை
ஆவணங்கள்
முதற்பக்கம்| உங்கள் கருத்து | தொடர்பு கொள்ள | தள வரைபடம் | வரைபடம்
மேலே
© 2012 இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசுத் துணைச் செயலாளர், தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009, தமிழ்நாடு, இந்தியா.
தொழில்நுட்பம்: சாப்ட் சோர்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்